Saturday, August 7, 2010 | By: INDIA 2121

ஒரு இந்து இளைஞனின் மரணம்- பாகிஸ்தானில் எழுச்சி

 ஒரு இந்து இளைஞனின் மரணம் பாகிஸ்தானின் மனசாட்சியை தூக்கத்தில் இருந்து உலுக்கி எழுப்பியிருக்கிறது.
இஸ்லாமாபாத் அருகே விமானம் மலையில் மோதி 152 பேர் பலியானார்கள். லண்டனில் இளைஞர் நாடாளுமன்ற முகாமுக்கு சென்று திரும்பிய 6 பேர் அதில் அடங்குவர். அவர்களில் ஒருவர் பிரேம்சந்த். சொட்டுநீர் பாசனத்தின் மூலம் பாகிஸ்தானில் வேளாண்மை புரட்சி ஏற்படுத்தலாம் என்று கட்டுரை சமர்ப்பித்து பாராட்டு பெற்றிருந்த இளைஞர். அவரது சவப்பெட்டி மேல் பெயருடன் ‘கஃபிர்’ என்ற வார்த்தையை சேர்த்திருந்தார் அதிகாரி.
இறுதிச் சடங்குக்காக பெட்டி மீது மதத்தை குறிப்பிடுவது வழக்கம். இந்து என்பதற்கு பதில் அப்படி எழுதி இருந்ததை பார்த்து பிரேம்சந்தின் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குடும்பத்தினர் பார்வையில் படாமல் மைபூசி மறைத்து, ‘நாங்கள் உன்னை நேசிக்கிறோம்’ என எழுதி வைத்தனர். என்றாலும், அஞ்சலி செலுத்தும்போது ஒரு மாணவன் அடக்க முடியாமல் கொட்டி விட்டான். பெற்றோரும் உறவினர்களும் துடித்துப் போனார்கள். மற்றவர்களும் குமுறினர்.
கஃபிர் என்பது அரபு வார்த்தை. முஸ்லிம் அல்லாதவர்களை குறிப்பிடுவது. இஸ்லாம் மார்க்கத்தை ஏற்காதவர் என்பது அதன் அர்த்தமாக இருந்தாலும், மத தீவிரவாதிகள் அதை ‘எதிரி’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தியதால் அவதூறான சொல்லாக தோற்றம் பெற்றுவிட்டது. மரணத்தில்கூட ஒரு மனிதனுக்கு உரிய மரியாதை வழங்க நமக்கு தெரியவில்லையே என்று இளைஞர்கள் கொதிப்புடன் இணைய தளங்களில் எழுதுகின்றனர். அனைத்து மதங்களையும் மதிக்க இறைவன் கட்டளையிட்டாலும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் ஏன் பின்பற்றுவதில்லை; இதுதான் சிறுபான்மை மதங்களை சேர்ந்த மக்களின் நாட்டுப்பற்றுக்கு வழங்கும் அங்கீகாரமா என்று சாட்டையடி கொடுக்கின்றனர்.
மதத்தின் பெயரால் தீவிரவாதத்தை நியாயப்படுத்த முற்படும் சக்திகள் செல்வாக்குடன் செயல்படும் பாகிஸ்தானில் இந்த கண்டன குரல்கள் கேட்பது அசாதாரண விஷயம். படித்தவர்களும் பத்திரிகைகளும்கூட அரசின் அநீதிகளை மவுனமாக சகித்துக் கொள்ள பழகிவிட்ட சூழலில் பாகிஸ்தான்இளைஞர்களின் ஆவேசம் ஆரோக்கியமான புதுக்காற்று.

9 comments:

geethappriyan said...

நல்ல பகிர்வு நண்பா

ஒசை said...

உலகின் மொத்த அழிவுக்கும் இந்த பாரபட்சமே காரணமாக போகிறது.

Robin said...

//அவரது சவப்பெட்டி மேல் பெயருடன் ‘கஃபிர்’ என்ற வார்த்தையை சேர்த்திருந்தார் அதிகாரி//

காட்டுமிராண்டித்தனமான செயல்.

INDIA 2121 said...

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

நல்ல பகிர்வு நண்பா///

நன்றி நண்பா!

INDIA 2121 said...

RAJ said...

CLICK AND READ///

நன்றி ராஜ் சார்.

INDIA 2121 said...

ஒசை. said...

உலகின் மொத்த அழிவுக்கும் இந்த பாரபட்சமே காரணமாக போகிறது///

உண்மை தான்.

INDIA 2121 said...

Robin said...

//அவரது சவப்பெட்டி மேல் பெயருடன் ‘கஃபிர்’ என்ற வார்த்தையை சேர்த்திருந்தார் அதிகாரி//

காட்டுமிராண்டித்தனமான செயல்.///

அவர்களுக்கு இது ஒன்றும் புதிதில்லை.

Rafeek said...

பாகிஸ்தானின் பிற்போக்கு தன மனோபாவத்தின் வெளிபாடே இது !

INDIA 2121 said...

Mohamed said...

பாகிஸ்தானின் பிற்போக்கு தன மனோபாவத்தின் வெளிபாடே இது !////

உண்மை தான் மொகமத் சார்

Post a Comment

Related Posts with Thumbnails