Wednesday, July 28, 2010 | By: INDIA 2121

இந்திய சிறைச்சாலையும் 5 நட்சத்திர ஓட்டலும்

 சினிமாவில் பார்க்கும் ஜெயிலுக்கும் நிஜ ஜெயிலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. முதலாவதில் இடம் சுத்தமாக இருக்கும். கைதிகள் உடை பளிச்சென்று இருக்கும். மணி அடித்ததும் வரிசையில் நின்றால் சாதம், சாம்பார் எல்லாம் கிடைக்கும். வார்டன்கள் அக்கறையாக குடும்பத்தை பற்றி விசாரிப்பார்கள். உண்மையான ஜெயில் இதற்கு நேர் மாறாக நரகம் போல் இருக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.
மகாராஷ்டிர உள்துறை இணை அமைச்சர் ரமேஷ் பாக்வேயும் நம்பினார். திடீரென்று ஒரு ஜெயிலுக்குள் போய் பார்த்தபோது சுரீரென்று சுட்டிருக்கிறது நிஜம். பளிங்கு கற்கள் பதித்த தரை. பளபளக்கும் பாத்திரங்கள், அவற்றில் வகை வகையான உணவுகள், பீங்கான் கோப்பைகளில் ரகம் ரகமான பழங்கள், மெத்தையுடன் விசாலமான படுக்கை, சுற்றிலும் சுவர்களில் அழகிய மாடல்களின் கவர்ச்சி போஸ்டர்கள். அட்டாச்டு பாத்ரூமுக்குள் எட்டிப் பார்த்த அமைச்சர் அதன் சுத்தம் கண்டு அசந்துபோனார். ‘ஐந்து நட்சத்திர ஓட்டல் அறை மாதிரி இருக்கிறது’ என்று சட்டசபையில் ஆச்சரியப்பட்டார். இதெல்லாம் என்ன என்று போஸ்டரை காட்டி அமைச்சர் கேட்டபோது கைதி அட்டகாசமாக சிரித்தானாம். அவன் பெயர் அபு சலீம். 1993ல் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதி.
வழக்கு முடிந்து தண்டனை அறிவிக்கப்படும்வரை ஒருவர் விசாரணைக் கைதி. அப்போது அவர்கள் சொந்த உடை அணிந்து கொள்ளலாம்; வீட்டு சாப்பாடு வரவழைத்து சாப்பிடலாம் என கோர்ட் கூறியிருக்கிறது. இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சுமார் நான்கு லட்சம் பேரில் பாதிக்கு மேல் இந்த பிரிவில் வருகிறார்கள்.
கோடிக் கணக்கில் வழக்குகள் தேங்கிக் கிடக்கும் நிலையில் தீர்ப்புகள் வர எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது யாருக்கும் தெரியாது. வசதி படைத்தவர்களும் செல்வாக்கான கோஷ்டி பின்னணி உள்ளவர்களும் அதுவரை இந்த “விருந்தினர் மாளிகை”யில் சகல வசதிகளோடும் தங்கலாம். கைதிகள் அப்படித்தான் குறிப்பிடுகின்றனர். செல்போனும் கிடைப்பதால் எந்த குறையும் தெரிவதில்லை.
சிறை சீர்திருத்தம் பற்றி 50 ஆண்டுகளாக பேசப்படுகிறது. ஊழலால் செழிப்பவர்கள் எதுவும் சீர்பட விடமாட்டார்கள் போலிருக்கிறது.
இது தான் ஜனநாயகம்! என் அருமை இந்தியாவே,எவ்வளவு நாட்க்ளுக்கு தான்
பணக்காரர்களுக்கு மட்டுமே சலுகைகள் அளிப்பாய்.
ஏழைகளுக்கு என்று தான் வாழ்வளிப்பாய்!

3 comments:

THOPPITHOPPI said...

/* இது தான் ஜனநாயகம்! என் அருமை இந்தியாவே,எவ்வளவு நாட்க்ளுக்கு தான்
பணக்காரர்களுக்கு மட்டுமே சலுகைகள் அளிப்பாய்.
ஏழைகளுக்கு என்று தான் வாழ்வளிப்பாய்! /*

யார் ஏழை? திறமை இல்லாதவனும் முட்டாள்களும் தான் ஏழை ?

எதற்கு எடுத்தாலும் இந்தியாவை குறை சொல்லுவதை நிறுத்துங்கள். அம்பானி என்ன பரம்பரை பணக்கரன்ன ?

*கல்வியில் உயர்ந்த மாநிலங்கள் இப்போது ஏழை பட்டியலில் இல்லை அது உங்களுக்கு தெரியும்மா ?

*அரசாங்கம் எப்ப FREE கொடுக்கும்ன்னு எதிர் பார்க்க வேண்டியது, அப்புறம் நாங்க ஏழை அரசியல் வாதி சொரண்டி தின்னுட்டன்னு சொல்லவேண்டியது.

*இந்தியாவில் இப்போது இருக்கும் பணக்காரர்கள் தொழில் அதிபர்கள் ஒன்னும் பரம்பரை பணக்காரன் இல்லை, முதலில் முயற்சி செய்யவும் . இந்திய இந்தியான்னா இந்தியா ஒன்னும் கொடுக்காது நம்பதான் முயற்சி செய்யணும் . இப்படி நாங்கள் ஏழை என்று கூறிக்கொண்டே இருக்கும் வரை இந்திய ஏழை நாடுதான் அதை எந்த சுப்பன் வந்தாலும் மாற்ற முடியாது


/*பணக்காரர்களுக்கு மட்டுமே சலுகைகள் அளிப்பாய்.
ஏழைகளுக்கு என்று தான் வாழ்வளிப்பாய்!/*


*நீங்கள் எதிர் பார்க்கும் சலுகை வாழ்வாதாரத்தில்லா இல்லை ஜெயிலிள்ள ?

* என்ன சலுகை வேண்டும் ?

*மாதம் இருபது கிலோ இலவச அரிசியா? இல்லை இலவச சொகுசு ஜெயில் வாழ்க்கையா ?



இப்படி இலவசங்களையும் சலுகைகளையும் எதிர்ப்பார்த்து காலத்தை ஓட்டுபவர்கள் இருக்கும் வரை இந்திய ஏழை நாடுதான்


பின் குறிப்பு : நான் அம்பானியை எடுத்துக்கட்டுக்குதான் சொன்னேன் அதற்காக எல்லாரும் அம்பானி ஆகா முடியாது என்று பதில் அளிக்க வேண்டாம்.

THOPPITHOPPI said...

மன்னிக்கவும் எனக்கு சற்று கோபம் அதிகமாகவே வந்து விட்டது. உங்கள் கட்டுரைகள் அனைத்தும் அருமையாகவே உள்ளது. தயவு செய்து இனி இந்தியாவை குறை சொல்லுவதை நிறுத்துங்கள். இந்தியாவை போன்று ஒரு சிறந்த நாடு இந்த உலகில் இல்லை.

ஜெய் ஹிந்த்

இப்படிக்கு
கா.தமிழ் அமுதன்( செயலாளர் ),
மும்பை தமிழ் சங்கம்,
மும்பை .

INDIA 2121 said...

உங்கள் தேசப்ற்றுக்கு தலை வணங்குகிறேன்
அதே நேரத்தில் அபுசலிம்,கசாப் மற்றும் உயர் பதவியில் ஊழல் புரிந்தோரும்,அரசியலில் ஊழல்
புரிந்தோரும் ஜெயிலில் சொகுசு வாழ்க்கை வாழ்வதை
தான் சுட்டி காட்ட விரும்புகிறேன்.
அவர்களின் சொகுசு வாழ்க்கைக்காக மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதை தான் சுட்டி காட்ட விரும்புகிறேன்.
ஆனால், உணவு தானியங்களை சேமிக்க நல்ல சேமிப்பு கிடங்குகளை நமது அரசால் உருவாக்க
பணம் இல்லை.
நமது நாட்டையோ,அரசையோ குறை கூறவில்லை.
இன்னும் நல்ல திட்டங்களும்,நல்ல செயல்பாடுகளும்
நமது நாட்டிற்கு தேவை.
மக்கள் யாரும் இலவசம் கேட்கவில்லை,அரசியல்வாதிகளின் சுய லாபத்திற்காக
இலவசம் என்ற புழுவை போட்டு மக்களின் கோவணத்தையும் உருவி கொண்டிருக்கிறார்கள்.
பாவம் மக்கள் ஒன்றும் தெரியாத வெள்ளந்திகள்.

Post a Comment

Related Posts with Thumbnails