Monday, July 19, 2010 | By: INDIA 2121

மத்திய ரிசர்வ் போலீஸ் படை

  மாவோயிஸட்களுக்கு எதிராக போராடும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் நிலை பரிதாபமாக உள்ளது. ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேற்குவங்கம் உள்ளிட்ட மாவோ தீவிரவாதிகள் அதிகம் உள்ள பகுதிகளில் இவர்கள் நீண்ட நாட்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திடீர் திடீர் என தாக்கும் தீவிரவாதிகளின் கொரில்லா பாணி தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் நக்சல்களின் கையால் இவர்கள் கும்பல் கும்பலாக சுட்டுக்கொல்லப்படும் நிலை உள்ளது. மத்திய ரிசர்வ் படையினர் பண்ணையில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழி போன்றவர்கள். அவர்களை கொத்துக்கொத்தாக பிடித்து கொன்று குவியுங்கள் என நக்சல் தலைவன் தனது அமைப்பினருக்கு இளக்காரமாக சொல்லும் அளவுக்கு நிலை இருக்கிறது. இதனால் சிஆர்பிஎப படை வீரர்கள் பலருக்கு கடுமையான மன அழுத்தம் இருப்பதாக கூறப்படுகிறது.
17.07.2010 இரவு நடந்த கொடூர சம்பவம் ஒன்று இதை தெளிவுபடுத்துகிறது. ஜார்கண்டின் சரைகெலா மாவட்டம் குசாய் கிராமத்தில் சிஆர்பிஎப் படையின் 196வது பட்டாலியன் முகாம் உள்ளது. இதில் பாதுகாப்பு பணியில் இருந்த ஹர்பிந்தர்சிங் என்ற வீரர், தனது சக வீரர்களையே வெறிபிடித்தது போல துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியுள்ளார். மெஸ்சில் உணவு வீணாவது தொடர்பான தகராறில் இந்த பயங்கர சம்பவம் நடந்ததாக சொல்கிறார்கள். மேலும் ஹர்பிந்தர்சிங் அப்போது குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சரமாரியாக அவர் சுட்டதில் அதிகாரி உள்பட 6 வீரர்கள் கொல்லப் பட்டுள்ளனர். நான்கு மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தின் முடிவில் ஹர்பிந்தர்சிங்கும் சக வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.
மாவோ தீவிரவாதிகளின் தாக்குதலால் எந்நேரமும் உயிர் போகலாம் என்ற நிலையில் இருந்த வீரர்கள், சக வீரர் ஒருவராலேயே சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைமையகம் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்துகிறது.
உணவு வீணாவது போன்ற சாதாரண பிரச்னைக்காக சக வீரர்களே கொல்லப்படுகின்றனர் என்பதை நம்ப முடியவில்லை என்கின்றனர் ஜார்கண்டின் மூத்த போலீஸ் அதிகாரிகள். விடுப்பு முடிந்து தற்போதுதான் ஹர்பிந்தர்சிங் பணியில் சேர்ந்திருக்கிறார். அவர் தொடர்ந்து மன அழுத்த பிரச்னையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையாக போராட வேண்டியிருப்பதாலும், போதிய ஆட்கள் இல்லாததாலும் சிஆர்பிஎப் வீரர்கள் மன உளைச்சலுக்கும் அழுத்தத்துக்கும் ஆளாகி வருவது முன்பே கண்டறியப்பட்டிருக்கிறது. பலர் தற்கொலை செய்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. எனவே கொரில்லா தாக்குதலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு முறையான பயிற்சி கொடுப்பதும் உரிய கவுன்சலிங் அளிப்பதும் முக்கியமானது.

7 comments:

THOPPITHOPPI said...

பயிற்சி கொடுப்பதற்கு பதில் இதற்க்கு தீர்வு காண கோரிக்கைகளை பரிசீலனை செய்யல்லாம்

THOPPITHOPPI said...

/*எனவே கொரில்லா தாக்குதலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு முறையான பயிற்சி கொடுப்பதும் உரிய கவுன்சலிங் அளிப்பதும் முக்கியமானது. /*


என்னதான் முறையான பயிற்சியும் கவுன்சலிங்கும் கொடுத்தாலும், சம்பளத்துக்கு சண்டைப்போடுபவனுக்கும் குறிக்கோளுக்காக சண்டை போடுபவனுக்கும் வித்தியாசம் இருக்குல.

THOPPITHOPPI said...

நல்ல பதிவுகள் அதற்க்கு ஏற்றார் போல் படங்கள்.

THOPPITHOPPI said...

http://4.bp.blogspot.com/_q0d2QLJyBmU/TEPkTNRa7qI/AAAAAAAABIM/g8ta1wdgplk/s1600/rs-one-lakh.jpeg

THOPPITHOPPI said...

xie xing chuva ci chaang se choo chera sooze xaaa.

THOPPITHOPPI said...

உணவு வீணாவது போன்ற சாதாரண பிரச்னைக்காக சக வீரர்களே கொல்லப்படுகின்றனர் என்பதை நம்ப முடியவில்லை

THOPPITHOPPI said...

சிநிம்மாவில் நடிக்க ஆர்வம் உள்ளவர்கள் எங்களை அணுகவும்

Post a Comment

Related Posts with Thumbnails