Friday, July 16, 2010 | By: INDIA 2121

திரு.அப்துல் கலாம் அமைத்த குடில், நீருற்று இடிப்பு

 
 ஜனாதிபதி மாளிகையில் உள்ள மொகலாய தோட்டத்தில், அப்துல் கலாம் ஆசையுடன் அமைத்த குடில், மியூசிக் நீருற்று தற்போது இடிக்கப்பட்டு விட்டது.
ஜனாதிபதியாக கலாம் இருந்தபோது ஜனாதிபதி மாளிகையில் உள்ள மொகலாய தோட்டத்தில், மணிப்புரி ஸ்டைல் குடில் ஒன்று அமைக்கப்பட்டது. அது கலாமுக்கு மிகவும் பிடித்தமான இடம். காலை மற்றும் மாலை நேரங்களில் கலாம் அங்கு அமர்ந்திருப்பார். தனது இரு புத்தகங்களை அந்த குடிலில் அமர்ந்து எழுதியதாக கலாம் கூறியுள்ளார். அந்த இடத்தை ‘சிந்தனை குடில்’ என கலாம் குறிப்பிடுவார். அந்த குடில் தற்போது இடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதற்காக அந்த குடில் இடிக்கப்பட்டுள்ளது. மொகலாய தோட்டத்தில் கலாம் அமைத்த மியூசிக் நீருற்றும் இடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

4 comments:

THOPPITHOPPI said...

இந்தியாவில் இதெல்லாம் சாதாரணம் ? எப்போது மதிப்பளித்து இருக்கிறார்கள் ?

THOPPITHOPPI said...

http://sirippupolice.blogspot.com/

THOPPITHOPPI said...

"india2121" அர்த்தம் என்ன ?

THOPPITHOPPI said...

பொக்கிஷத்தை இடிதுவிட்டர்களா, சேரன் அண்ணனுக்கு போன் போடுங்கையா .....

Post a Comment

Related Posts with Thumbnails