Tuesday, July 20, 2010 | By: INDIA 2121

54 வயது மகன் மீது புகார் கொடுத்த 104 வயது தந்தை

 “பெத்தமனசு பித்து; பிள்ளை மனசு கல்லு” என்று பெற்றோர் & பிள்ளைகள் உறவு பற்றி பேசப்படும் பழமொழிகள் நிறைய உண்டு. ‘தென்னைய வச்சா இளநீரு... புள்ளையை பெத்தா கண்ணீரு...’ என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் இப்போதும் ஒலிப்பது உண்டு. பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை இப்படி புலம்ப விடும் பிள்ளைகளை தண்டிக்க சட்டமே வந்து விட்டது. சட்டத்தின் கீழ் நிறைய பேர் தண்டிக்கப்படும் நிலையும் தொடங்கி விட்டது. ஆனாலும், சமூகத்தில் இந்த குற்றம் சத்தமின்றி தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் குடும்பம், உறவு, பாசம் என பக்கம் பக்கமாக வசனம் பேசும் தமிழகம் தான் பெற்றோரை கைவிடும் பிள்ளைகளை அதிகம் கொண்ட மாநிலங்களில் முதலிடமாம். அதிலும் தலைநகர் சென்னை தனியிடம் பிடித்திருக்கிறது.
சமீபத்தில் 104 வயது முதியவர் ஒருவர், மகனிடம் கருணை கேட்டு நீதிமன்றம் வந்திருக்கிறார் என்ற செய்தி ஒன்று போதும், பெற்றோர் & பிள்ளை உறவை சொல்ல. ஏன் இந்த நிலை? என்ன காரணம்?
கூட்டுக் குடும்ப முறை குறைந்து போனது தான் காரணமா? இல்லை, பிள்ளைகளை வளர்க்கும் முறையில் வந்த கோளாறா? எந்திரத்தனமான வாழ்க்கை என்பதால் தொலைந்து போனதோ பாசம்? எது காரணமோ தெரியவில்லை. ஆனால், ஊர்தோறும் வந்து விட்டது முதியோர் இல்லங்கள், நாகரீகத்தின் அடையாளமாக.
பிள்ளைகளை பெற்று பேணிக்காத்து, படிக்க வைத்து, வேலையும் வாங்கி கொடுத்து கல்யாணமும் செய்து வைக்கிறார்கள். ஆனால் அந்த பிள்ளைகள் சேர்ந்து 2 பேரை அதாவது பெற்றோரை கவனிக்க மனசில்லாமல் விட்டு விடுகின்றனர்.
உழைக்கும் போது இருந்த மரியாதையும், கவனிப்பும் ஓய்வு பெற்று உட்கார்ந்திருக்கும் பெற்றோர்களுக்கு கிடைப்பதில்லை. பெற்றப் பிள்ளைகள் மட்டுமின்றி பேரப் பிள்ளைகளாலும் பெரியவர்களுக்கு மரியாதை குறைவு. இப்படி மனம் புழுங்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை ஏராளம்.
‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று சொல்லி பழக்கப்பட்ட பூமி. ஆனால், அன்பும், பாசமும் அற்றுப் போய் விட்டதாலோ என்னவோ, அந்த முதல் தெய்வங்கள் இன்றைக்கு முதியோர் இல்லங்களில் தான் அடைக்கலம் கொண்டுள்ளன. 
               ‘100 கோடியை கடந்த மக்கள் தொகையில் சுமார் 8.1 கோடி பேர் 60 வயதை கடந்த முதியவர்கள்’ என்று சொல்கிறது முதியோர்களுக்கான தொண்டு நிறுவனமான ஹெல்பேஜ் இந்தியா ‘‘முதியோர்களின் எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் 13.5 கோடியாக இருக்கும். இப்போது இருக்கும் 8.1 கோடியில் 5.1 கோடி முதியவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள். முதியவர்களில் 70 சதவீதம் பேர் படிப்பறிவு இல்லாதவர்கள். தென்னிந்தியாவில் இருக்கும் முதியவர்களில் 82 சதவீதம் பேர் போதிய ஆதரவு இல்லாத நிலையில் இருக்கின்றனர். அதேபோல் 87 சதவீதத்தினர் தொடர் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள். 80 சதவீதத்தினர் ஓய்வூதியம் உட்பட எந்த வருவாயும் இல்லாதவர்கள். வயதானவர்களில் 60 சதவீதத்தினர் சட்ட உரிமைகள் உட்பட எந்த விவரத்தையும் அறியாதவர்கள். 52 சதவீத முதியவர்கள், தங்கள் வாரிசுகளால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள்.
இதில் கொடுமையான விஷயம் 40 சதவீத முதியவர்கள், கட்டாயம் வேலைக்கு சென்று பிழைக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் 70 வயதை கடந்தவர்கள்’’ 
              இனி முதியோர் இல்லங்கள் குறைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. பிறப்பு குறைகிறது. முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஒரு குடும்பம் ஒரு பிள்ளை என்ற கொள்கையும் இதற்கு காரணம். முன்பு நான்கைந்து பிள்ளைகள் இருப்பார்கள் ஒருவர் இல்லாவிட்டால், ஒருவர் பார்த்துக் கொள்வார் என்ற நிலை இருந்தது.
அந்த காலத்தில் விவசாயம் முக்கிய தொழில். ஊரை விட்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. கூட்டு குடும்ப வாழ்க்கை இருந்தது. கூட்டுக் குடும்பங்களில் எப்போதும் முதியவர்களுக்கு மரியாதை அதிகம். இப்போது அப்படி இல்லை. விளைச்சல் குறைந்து விட்டது. பிழைப்புக்காக வெளியூர் செல்ல வேண்டிய நிலை. படிப்பு, பணி காரணமாக ஆண், பெண் என இரண்டு தரப்பும் வெளியூருக்கு செல்லகின்றனர். அதனால் வீட்டில் இருக்கும் பெரியவர்களை கவனிப்பது இயலாத விஷயமாகி வருகிறது. அதுமட்டுமல்ல சில பெற்றோர்களே விரும்பி முதியோர் இல்லங்களில் சேருகின்றனர். காரணம் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் கவனிக்காதது மட்டுமில்லை. அவர்கள் போடும் கட்டுபாடுகளும் முதியோர்களுக்கு பிடிப்பதில்லை. அதேபோல் வீட்டிலுள்ள இடநெருக்கடி பிள்ளைகளுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதையும் சில முதியோர் காரணங்களாக சொல்கின்றனர். முதியோர் இல்லங்கள் அதிகமாகி வருவது நமது பண்பாட்டுக்கும், பழக்க வழக்கத்திற்கும் மாறானது என்றாலும், அதிகமாகி வருவதை தவிர்க்க முடியாது.

5 comments:

THOPPITHOPPI said...

/*தென்னைய வச்சா இளநீரு... புள்ளையை பெத்தா கண்ணீரு...’/*

அஞ்சு மணி பஸ்சு அஞ்சு மணிக்கு வந்துச்சாம் ஆறு மணி பஸ்சு ஆறு மணிக்கு வந்துச்சாம் அத மாதிரில்லா இருக்கு நீங்க சொல்லுறது ....

THOPPITHOPPI said...

@கருத்து கந்தசாமி

டப்பாவ டப்பானு சொன்னானாம் அப்பாவ அப்பான்னு சொன்னானாம் அத மாதிரில இருக்கு நீ சொல்லுறது

THOPPITHOPPI said...

T.R:: வாடா என்மச்சி வாழக்கா பச்சி உன் உடம்ப பிச்சி போட்டுடுவ்வன் பச்சி..................................வாடா என்மன்னாரு வாங்கித்தான் நீ பாரு,...........நின்னாக்கா ஒதப்பன் நேமிந்தாக்க மிதிப்பன்



http://www.youtube.com/watch?v=jbJnnvIRyz0

THOPPITHOPPI said...

சூழ கருப்பன் அடிடா இத சொல்லிகிட்டே புடிடா......கும்தலக்கற கும்மா இத வாங்கிக்கோடா சும்மா........... ஆட்டங்காலி படுதாகாளி சீக்காளி வாடா என் தக்காளி


கிளிக்கவும்
http://www.youtube.com/watch?v=axkYmvvO8g4

THOPPITHOPPI said...

GOIYAALE SUPER.

Post a Comment

Related Posts with Thumbnails