Friday, July 16, 2010 | By: INDIA 2121

புது சட்டம் வருகிறது

 குழந்தைகளை அடிக்கும் பெற்றோரை தண்டிக்க புதுச்சட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
குழந்தைகளை அடிக்கும் பெற்றோரை தண்டிக்க அமெரிக்காவில் சட்டம் உள்ளது. அதுபோன்ற சட்டம் நம்நாட்டிலும் கொண்டு வரப்படவுள்ளது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் குழந்தைகள் தாக்கப்படும் சம்பவம் நம்நாட்டில் அதிகம் நடக்கிறது. இதை தடுக்க குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய கமிஷன்(என்சிபிசிஆர்) சில விதிமுறைகளை வகுத்துள்ளது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் கடந்த ஆண்டு உருவாக்கிய குழந்தைகளுக்கு எதிரான தாக்குதல் தடுப்பு மசோதாவும் அமைச்சரவையில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இச்சட்டத்தின் மூலம் குழந்தைகளை அடிக்கும் பெற்றோர், ஆசிரியர், உறவினர் மற்றும் நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். குழந்தைகளை முதல் தடவை அடித்தால் ஒரு ஆண்டு ஜெயில் அல்லது ரூ.5000 அபராதம், இரண்டாவது முறையாக அடித்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை பிச்சை எடுக்க விடுபவர்கள், வேலைக்கு வைத்திருப்பவர்கள், கடத்துபவர்கள் மீதும் இந்த சட்டம் பாயும். இந்த சட்ட மசோதா, பார்லிமென்ட்டில் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

3 comments:

THOPPITHOPPI said...

அடிக்காமல் வளர்த்தால் குழந்தைகள் எதிர்காலத்துக்கு நல்லதா ?

THOPPITHOPPI said...

பொண்டாட்டிகள் புருஷனை அடிக்காமல் இருக்க எப்போது சட்டம் வரும் ?

THOPPITHOPPI said...

சுரேஷ், செம்ம அடி வாங்கி இருப்பிங்க போல ?

Post a Comment

Related Posts with Thumbnails