Saturday, July 10, 2010 | By: INDIA 2121

ஆக்டோபஸ் ஜோசியம்

 ஒரு கடல் பிராணியை வறுத்து சாப்பிட ஒரு நாடே நாக்கு தொங்க காத்திருக்கிறது.
ஆக்டோபஸ் பால் எட்டியிருக்கும் சிகரம் கடல் உலகத்துக்கு கிடைத்த கவுரவம். ஜெர்மனியில் ஒரு மீன் காட்சியகத்தின் கண்ணாடி தொட்டிக்குள் மிதக்கும் அந்த ஜந்து, உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெயிக்கப்போவது யார் என்பதை ‘கணித்து’ சொல்லியிருக்கிறது. ஞாயிறன்று நெதர்லாந்து அணியை ஸ்பெயின் தோற்கடித்து கோப்பையை வெல்லுமாம்.
மோதும் நாடுகளின் தேசிய கொடி பொறித்த இரு டப்பாக்களை தீனியுடன் தொட்டிக்குள் வைக்கின்றனர். எந்த டப்பாவை பிடித்து அது தீனியை விழுங்குகிறதோ அந்த அணி ஜெயிப்பதாக ஐதீகம். ஜெர்மனி பங்கேற்ற 6 போட்டிகளின் முடிவை சரியாக ‘கணித்து’ உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறது ஆக்டோபஸ் பால். அரையிறுதியில் ஸ்பெயினிடம் ஜெர்மனி தோற்கும் என்றது. அதே மாதிரி நடந்தது. ஜெர்மானியர்கள் கொதிக்கின்றனர். ஒழிக கோஷத்துடன் நாடெங்கும் ஆர்ப்பாட்டம். வாயில்லா ஜீவனின் பிறப்பையே சந்தேகிப்பதாக இன்டர்நெட்டில் அவதூறு பரப்புகின்றனர். தீனி தின்ற நன்றி இன்றி நடந்துகொண்ட துரோகியை கொன்று கூறுபோடாமல் விட மாட்டோம் என சபதிக்கின்றனர்.
நிலைமை விபரீதமாவதை கண்டு ஸ்பெயின் அரசு கவலைப் படுகிறது. ஆக்டோபஸ் பாலை பாதுகாக்க அதிரடிப்படை அனுப்ப தயார் என்று அதன் பிரதமர் அறிவித்துள்ளார். மிரண்டு போன ஆக்டோபஸ், இன்று நடக்கும் ஆறுதல் போட்டியில் உருகுவேயை ஜெர்மனி ஜெயிக்கும் என்று ஆரூடம் சொல்லி தப்பப் பார்க்கிறது. பியர் வியாபாரிகளை தவிர யாரும் இதை கண்டுகொண்டதாக தெரியவில்லை. யூரோ கோப்பை போட்டியிலும் பால் ஜோசியம் சொன்னது. இறுதி ஆட்டத்தில் பலிக்கவில்லை. அதே போல் நாளை சொதப்பினால் என்னாவது என்று ஸ்பெயின் வீரர்களுக்கு லேசான கிலி.
யார் ஜெயித்தாலும் சரி, ஃபைனலுக்கு பிறகு பாலுக்கு பால்தான். ஆக்டோபஸ் ஆயுள் 3 ஆண்டு. பாலுக்கு இப்போது இரண்டரை வயது. இந்தியன் கிளி ஜோசியம் கேட்டால் கிண்டலடிக்கும் உலகம், ஐரோப்பிய ஆக்டோபஸ்ஸை ஆராதிக்கிறது.
எல்லோரையும் ஸ்பெயின் மீது பணம் கட்ட வைத்துவிட்டு, நெதர்லாந்து ஜெயிக்க காத்திருக்கும் சூதாடிகள் காட்டில் பணமழை கொட்டப் போகிறது.

5 comments:

THOPPITHOPPI said...

கேள்வி: தமிழக மீனவர் செல்லப்பன், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொலையுண்ட பிரச்சினை குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசுக்கு தி.மு.க. அளித்து வரும் ஆதரவை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டுமென்று தெரிவித்திருக்கிறாரே?

THOPPITHOPPI said...

ஜெயலலிதா அதைப்பற்றி அறிக்கை விடுத்ததில், தி.மு.க மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், தி.மு.க. அமைச்சர்களை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார் என்றால், கிராமத்தில் பழமொழி சொல்வார்களே - "அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும்'' என்று - அதைப்போல ஜெயலலிதா பரிதாபகரமான எதிர்பார்ப்போடு - எப்படியாவது மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலக வேண்டும் - மத்தியிலே ஆட்சி கவிழ வேண்டும் - தமிழகத்திலும் ஆட்சி கவிழ வேண்டும் - ஊர் பற்றி எரிகிற நேரத்தில் கிடைத்தவரை ஆதாயம் பெறலாம் என்று அவர் துடிக்கிறார்.

THOPPITHOPPI said...

அதன் விளைவுதான் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலக வேண்டும், மத்திய தி.மு.க. அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தவிக்கிறார். தனது வழக்கமான பாணியில் மக்களை ஏமாற்றலாம் என்று கருதுகிறார்.

இந்தப் பிரச்சினைக்காக மத்திய அரசுக்கு நான் வழக்கம்போல் கடிதம் எழுதியுள்ளேன் என்கிறார் ஜெயலலிதா. ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது தமிழக மீனவர்கள் [^] இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டபோது, ஜெயலலிதா என்ன செய்தார்? அவரும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக்கொண்டு தானே இருந்தார்? மாறாக இலங்கைக்குப் படையெடுத்துச் செல்கிறேன் என்று புறப்பட்டாரா?.

THOPPITHOPPI said...

ஜெயலலிதா மட்டுமல்ல; ஜெயலலிதாவைப் போலவே சில பேர் தங்களை வீராதி வீரர்கள் என்று காட்டிக் கொள்ள -இந்தப் பிரச்சினையில் டெல்லிக்குக் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா என்று கேட்கிறார்கள். இந்தச் சூராதி சூரர்கள், சூரபத்மன் பேரர்கள் - டெல்லிக்குக் கடிதம் எழுதுவதற்குப் பதிலாக "இதோ புறப்பட்டு விட்டது பார்! எங்கள் போர்ப்படை'' என்று இலங்கைக்கு கடற்படையை அனுப்பப் போகிறார்களா? அல்லது தாங்கள் சேமித்து வைத்திருக்கும் தொண்டர் படை வீரர்களை எல்லாம் "தொப்'' "தொப்'' என்று கடலில் குதித்து நீந்தியே சென்று கொழும்பு துறைமுகத்தில் கரையேறி அங்குள்ள கோட்டை, கொத்தளங்களை முற்றுகையிடச் சொல்லப் போகிறார்களா? ஒரு வேளை அப்படி அவர்கள் போட்டிருந்த திட்டத்தை நான் டெல்லிக்கு கடிதம் எழுதியதின் மூலமாக கெடுத்து விட்டேனா என்பதைத் தெரிவித்தால் -அவர்களுடைய விவேகத்தைப் பாராட்டாவிட்டாலும், வீரத்தைப் பாராட்டவாவது முடியும் அல்லவா?.

THOPPITHOPPI said...

hehehehehe...... jayalalithavukku nethi adiiiiii

Post a Comment

Related Posts with Thumbnails